இவ்வருடத்தின் ஜூன் மாதத்திற்கான கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்க வீதம் 6.8% ஆக
அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்திணைக்களம் வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, 2026 மே
மாதத்தில் கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்கம் 5.5% ஆகப் பதிவாகியிருந்தது.
2026 ஜூன் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 3.6% ஆக அதிகரித்துள்ளதுடன்,
இது மே மாதத்தில் 0.9% ஆகப் பதிவாகியிருந்தது.
அதேபோல், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதமும் ஜூன் மாதத்தில் 8.4% ஆக அதிகரித்துள்ளது.
இது 2026 மே மாதத்தில் 7.8% ஆகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







