சுகீஷ்வர பண்டாரவுக்கு ஜூலை 8 வரை மீண்டும் விளக்கமறியல்

5
0
Spread the love

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு, ஜூலை மாதம் 08 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

அதுவரை சந்தேகநபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவார் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here