டெங்கு பாதிப்பு 55,000 ஐக் கடந்தது

4
0
Spread the love

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,024 டெங்கு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் மட்டும் 21,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ரீதியான பாதிப்புகள்- கொழும்பு மாவட்டம்: 11,392 நோயாளர்கள், கம்பஹா மாவட்டம்: 11,006 நோயாளர்கள்

பொதுமக்கள் இன்னமும் நுளம்புகள் முட்டையிடும் இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே இந்தத் தீவிரப் பரவலுக்கு முதன்மைக் காரணம் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின், நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றாக அழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சூழவே டெங்கு மிக வேகமாகப் பரவி வருகிறது. எனவே, இது குறித்து பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்படுமாறு வைத்தியர் கபில கன்னங்கர கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here