காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

12
0
Spread the love

சூரியபுர, ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவராவார்.

குறித்த நபர் மற்றுமொருவருடன் வயல்வெளிக்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்
என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here