பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு

5
0
Spread the love

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும்
குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு பொதி உணவு (சோறு) 15 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாவினாலும்,
சிற்றுண்டிகள் 5 ரூபாவினாலும், பராட்டா 5 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 5 ரூபாவினாலும், பால் தேநீர் 5 ரூபாவினாலும் தேநீர் 5
ரூபாவினாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here