டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ அண்மித்தது

85
0
Spread the love

நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகும் என்பதுடன், நேற்று (13) ஒரு நாளில் மாத்திரம் 1,279 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 33,127 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 14,464 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 13 நாட்களில் 14,572 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 21,538 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here