யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் காணி உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , குறித்த கும்பல் காணியிலிருந்து வெளியேறியுள்ளது.
இதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில் மற்றொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







