யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூது குழு இலங்கை வருகை தரவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப்பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரவுள்ள இந்த குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான நேற்யை தினம் புதிதாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.







