யோஷித ராஜபக்ஷ ஆஜராகாததால் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு

13
0
Spread the love

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், தனது கட்சிகாரர் சுகவீனமுற்றுள்ளதாகவும், எனவே வழக்கு விசாரணைக்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 730 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளார் எனக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here