டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

48
0
Spread the love

நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூலை மாதத்தில் நேற்றைய (24) தினம் வரை 25,530 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,135 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,835 ஆகும்.

தென் மாகாணத்தில் 12,260 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,924 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here