அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட வெவ்வேறு தேடுதல்களின் போது மோட்டார் குண்டு ஒன்றும், கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23.10.2026 வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சிகுடிச்சாறு பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த பகுதியினைச் சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக திருக்கோவில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் இரide தொடர்பாகவும் திருக்கோவில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







