கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான கோரச் சம்பவத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பெண் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 22.10.2026 வியாழக்கிழமை மாலை வேளையில் இத்துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் சாலியவெவ, 19 ஆம் கட்டைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், அவர்களில் அனுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் கல்வி பயின்று வந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து விபத்திற்கான உரிய காரணங்கள் மற்றும் மேலதிக விபரங்கள் குறித்த விசாரணைகளைத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.







