டெங்கு பரவல் தீவிரம் – நாட்டில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது!

22
0
Spread the love

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விபரங்கள் இன்று (26.10.2026) வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 105,097 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த நோய்த் தாக்கத்தினால் இதுவரை 79 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாகாண வாரியாகப் பார்க்கும்போது, அதிகளவான பாதிப்புகள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன; இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 52.02 சதவீதமாகும் (54,673 பேர்). மாவட்ட ரீதியாகக் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 22,053 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 20,384 பேரும், கண்டி மாவட்டத்தில் 8,378 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு பரவலுக்கான அதிஅபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நடப்பாண்டு அக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 4,377 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here