நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றது ஏன்? கஸ்ஸப்ப தேரர் விளக்கம்

28
0
Spread the love

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தமை தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் விளக்கமளித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலேயே கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தாம் ஹோட்டல்களுக்குச் சென்றமை தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

போராட்டக் களத்தில் தங்கியிருந்தபோது தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவத் தேவைகள் மற்றும் ஓய்வுக்காக மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிக்குச் சென்றதாகவும் கஸ்ஸப்ப தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில், தேரர்கள் நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு கஸ்ஸப்ப தேரர் தனது விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here