மன்னாரில் இடி மின்னல் தாக்கம் ஐந்து வீடுகள் சேதம்

15
0
Spread the love

மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் ஐந்து வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (ஒக்டோபர் 25) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடி மின்னல் தாக்கத்தின் போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், கூரையின் பகுதிகள் படுக்கைகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here