பறவை மோதியதால் லண்டன் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

27
0
Spread the love

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-503 என்ற விமானமே இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. Airbus A330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் பிற்பகல் 12.55 மணியளவில் லண்டன் நோக்கிப் புறப்பட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்பட்டுச் சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, விமானி நிலைமையைச் சமாளித்து விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பியுள்ளார்.

குறித்த விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பயணிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும், அவர்களை மாற்று விமானம் மூலம் இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அனுப்புவதற்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

பறவை மோதியதால் பாதிக்கப்பட்ட விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here