திருகோணமலை நீதிமன்றத்தில் சந்தேகநபர் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

42
0
Spread the love

திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் இன்று (28) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவர், 48 மணித்தியால பொலிஸ் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களில் ஒருவரே நீதிமன்றத்திற்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் தமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகக் கூறி அதிருப்தியடைந்த நிலையிலேயே குறித்த நபர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here