நாட்டில் 21 நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றம்

21
0
Spread the love

நாட்டில் தொடரும் கனமழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 9 நடுத்தர நீர்த்தேக்கங்கள் என மொத்தம் 21 நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறந்துவிடப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முகமாக, ஏற்கனவே சில பிரதான மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களின் வழிந்தோடும் கதவுகள் (Spill gates) திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் துறை குறிப்பிட்டுள்ளது
திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 74 நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 45.2 சதவீதமாக உள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை:
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படுவதால், நீர்ப்பாசனக் குளங்களை ஒட்டிய தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றோரங்களில் நடமாடுவோர் அனைவரும் மேலதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்தப் பாதுகாப்புப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here