மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதிகோரி போராட்டம் மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (2) முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், வேலன் சுவாமிகள், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகக் கூறப்படும் தரப்பினரால் பண்ணையாளர்களும் அவர்களது கால்நடைகளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பிரச்சினையை சிலர் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக இனவாத நோக்கில் பெரிதுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நில விவகாரம் நீண்டகாலமாகத் தொடரும் நிலையில், பண்ணையாளர்களின் உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.

20
0
Spread the love

மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (2) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், வேலன் சுவாமிகள், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகக் கூறப்படும் தரப்பினரால் பண்ணையாளர்களும் அவர்களது கால்நடைகளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை சிலர் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக இனவாத நோக்கில் பெரிதுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நில விவகாரம் நீண்டகாலமாகத் தொடரும் நிலையில், பண்ணையாளர்களின் உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here