இலங்கையின் 16 மாவட்டங்களில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று
பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகி, நாளை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் இடையிடையே பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், அம்பாறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், திருகோணமலை, நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருகோணமலை, பொலன்னறுவை, பதுளை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும் எச்சரிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பலத்த மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் திறந்த வெளிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சமடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







