நாட்டில் தற்போதைய நிலையில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை

24
0
Spread the love

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என்றும், தேவையான அளவு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். எனினும், சில தனியார் நிறுவனங்கள் நட்டம் ஏற்படுவதைக் காரணம் காட்டிச் சில பிரதேசங்களில் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையே சில இடங்களில் சிறிய அளவிலான வரிசைகள் உருவாகக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையை முழுமையாகச் சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகத் தொடர்ந்து தடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விநியோகம் குறைக்கப்பட்ட பகுதிகளுக்கு விசேட முன்னுரிமை அளித்து எரிபொருளை வழங்குவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here