எரிபொருள் விலைகளில் மாற்றம்

146
0
Spread the love

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியன ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here