வலி.வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி 29ஆவது வாரமாக போராட்டம்

4
0
Spread the love

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இன்று (நவம்பர் 6) தொடர்ந்து 29ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவிற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், குறித்த காணிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால் அவை இன்னமும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.
தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொண்டு அங்கு மீள்குடியேறுவதற்கான அனுமதியை வழங்குமாறு வலியுறுத்தி, இன்றைய போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here