நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும்

19
0
Spread the love

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று (07) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் விளையக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்வதற்காகப் பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை காணப்படக்கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here