அனுராதபுரம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கலைக்க முயன்ற பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் திடீர் அமைதியின்மையும் மோதலும் ஏற்பட்டுள்ளது. விகாரை வளாகத்தில் ஒன்றுகூடிய பிக்குகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், அவ்விடத்தில் பாதுகாப்பிற்காகக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைக் கலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கும் இடையே வாய்த்தர்க்கமும் கடுமையான தள்ளுமுள்ளும் ஏற்பட்டதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. விகாரை வளாகத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







