ஹட்டனில் பேருந்துகளுக்கு திடீர் சோதனை; விதிமீறியவர்களுக்குச் சட்ட நடவடிக்கை

16
0
Spread the love

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பயணிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் நோக்கில், ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட இசுறுமிக்க சோதனையின்போது, உரிய அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பயண நேர அட்டவணைகள் இன்றிச் சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்துடன், பயணிகளுக்கு முறையான பயணச்சீட்டு வழங்காமை, பழுதடைந்த டயர்களைப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் உதிரிப்பாகங்களைப் பொருத்திக் இயங்குதல் போன்ற பல்வேறு சட்டவிரோதக் குறைபாடுகளைக் கொண்டிருந்த பேருந்துகளுக்கு எதிராக அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டிருந்த மேலதிகப் பாகங்களை உடனடியாக அகற்றுமாறும் சாரதிகளுக்கு இதன்போது கடுமையான எச்சரிக்கையும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்புப் பிரிவின் பிரதம பரிசோதகர் சரத் சந்தன பண்டார விஜேசிங்க எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here