ஆண்டுக்கு 10,000 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேசிய வழிகாட்டல் கோவை அறிமுகம்

27
0
Spread the love

சிறுவர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடல் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளின் போது அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய தேசிய வழிகாட்டல் கோவை ஒன்றை அறிமுகப்படுத்தத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அப்பதிவுத் துறையின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான ஷானிகா மலல்கொட, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஆண்டுதோறும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகி வருவதாகத் தெரிவித்தார்.
தற்காலத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு அப்பால் இணையவெளியில் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுதல், இளம்வயது கர்ப்பங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற புதிய சவால்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவற்றுடன் இணைந்து கருத்துத் தெரிவித்த இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மன்றத்தின் (Sri Lanka CERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாரிக தமுனுபொல, டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வருமானம் ஈட்டும் (Monetization) நோக்கத்திற்காகச் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் பயன்படுத்தப்படுவதால் ஆபத்தான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு 53 ஆக இருந்த இதுபோன்ற உணர்திறன் வாய்ந்த டிஜிட்டல் சம்பவங்கள், இந்த ஆண்டின் நவம்பர் மாதமளவில் 180 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here