ஜனாதிபதி மாலைதீவுக்கு விஜயம்

65
0
Spread the love

 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ( 28.07) மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றமொன்றில் உரையாற்றவும், மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த பயணத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here