அனுராதபுரம் – மதவாச்சி பிரதான வீதியில் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.







