அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று (08.07) செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை (09.07) சற்று வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.







