வங்கக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய அந்தமான் கடல் பகுதிகளில் புதிய வளிமண்டலக் குழப்பமொன்று உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதியளவில் இந்த வளிமண்டலக் குழப்பம் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது படிப்படியாக வலுப்பெறக் கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகக் கடற் பிரதேசங்களில் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவக்கூடும் என்பதால், கடற்றொழில் மற்றும் கடற்படையினர் இச்சூழ்நிலையில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் சம்பந்தப்பட்ட கடல் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்







