எரிபொருளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் கூட எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றது.அத்தோடு
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்த குசும் சந்தனாயக்க,
அளவுக்கதிகமாக எரிபொருளைப்
பதுக்கி வைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.







