வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” – மன்னாரில் விழிப்புணர்வு வீதி நாடகம்

81
0
Spread the love

மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்”  எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் நேற்று (28.06) சனிக்கிழமை மன்னார் பேருந்து நிலையத்தில்  இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் பற்றி நாடகம், மற்றும் பாடல்கள் மூலம் மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது.

அத்துடன்,வாகன சாரதிகள் பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வின் பின்,குறித்த உயர் தொழில்நுட்பவியல் நிறுவன(ATI) மாணவர்களினால் மன்னார் பஜார் பகுதியில் சிரமதான பணியும் முன் னெடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here