ஹந்தான மலைப் பகுதியில் காணாமற்போன மாணவர்களுக்கு என்ன நடந்தது?

54
0
Spread the love

 

ஹந்தான மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்ற மாணவ குழுவொன்று வழிதவறிச் சென்ற நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மலை உச்சிக்குச் சென்ற மாணவர்கள் நேற்று மாலை கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென ஏற்பட்ட கடும் பனி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக வழிதவறிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் காணாமற்போனதாகத் தகவல் கிடைத்தவுடன், இராணுவம் மற்றும் தலாத்துஓயா பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அதிகாலை0 4 மணியளவில், காணாமல் போன 08 மாணவர்களையும் இராணுவமும் பொலிஸாரும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மாணவர்கள் மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here