மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

56
0
Spread the love

 

பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பாறை வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக
நாவலபிட்டிய ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை பதுளை மற்றும் ஹாலிஎல பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக, இன்று காலை மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்துள்ளது.

இதன் காரணமாக, இன்று காலை 5:45 க்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட உடரட மெனிகே ரயில் ஹாலி எல ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில் தெமோதர ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தற்போது ரயில்வே ஊழியர்கள் பாதையில் உள்ள பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகளில் இன்று முழுவதும் தாமதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here