விமான நிலையத்திற்குள் நுழைந்த கரடியால் ஏற்பட்ட சிக்கல்

49
0
Spread the love

 

ஜப்பானின், ஹிகஷின் நகரிலுள்ள விமான நிலையத்திற்குள் நேற்று முன் தினம் (27.06) கரடியொன்று நுழைந்துள்ளது.

இந்த கரடி விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்ததால் விமானங்கள் பயணிக்கவும், தரையிறங்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், விமான நிலையத்திற்கு அருகே இருந்த வனப்பகுதிக்குள் கரடி சென்றதையடுத்து விமான சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here