வத்தளை, பள்ளியவத்தையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய
கேரள கஞ்சா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா சுமார் 39 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







