மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30.06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 04 லீற்றர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.







