செம்மணியில் தாயொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்துள்ளார்கள் – அர்ச்சுனா

52
0
Spread the love

 

தாய் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்து ஆடையில்லாமல் செம்மணியில் புதைத்துள்ளார்கள்
என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (30.06.)திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறித்த தாயை கொலை செய்யும் போது அவருடைய குழந்தையை கையால் அமர்த்தி கொலை செய்துள்ளார்கள்.

கொலை செய்த குழந்தையை தாய் குற்றுயிராய் இருக்கும் போது அவள் நெஞ்சில் போட்டு புதைத்துள்ளனர்.

அகழ்ந்தெடுக்கும் பணிகளின் போது அந்த தாய் தன் குழந்தையை கட்டியணைத்தப்படி உள்ள எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது செம்மணியில் மக்களை சந்திக்கவிடாமல் சதி இடம்பெற்றது.

ஆனாலும் அதையும் தாண்டி மக்கள் அவரை சந்தித்திருக்கின்றார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here