பஸ் சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் இன்று முதல் கட்டாயமாக்கப்படும்
என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, பஸ் சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும்.
இருப்பினும்,அண்மைகாலமாக, சாரதிகள் அந்த விதிகளைப் பின்பற்றாததால்
விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் பஸ் சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் இன்று முதல் மீண்டும்
அமுல்படுத்தப்படும், மேலும் அதை கடைப்பிடிக்காத சாரதிகள் மீது சட்டம் அமல்படுத்தப்படும்.







