டெங்கு ஒழிப்பு தேசிய வாரம் – 143 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

64
0
Spread the love

 

டெங்கு ஒழிப்பு தேசிய வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் 143 பேர் மீது சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 16 மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர், சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் மொத்தம் 22,318 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 4,481 இடங்கள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்போது, 601 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் 143 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here