ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என
லாஃப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும்
05 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.







