இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பு இன்று(02) ஆரம்பமாகவுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 க்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்தவுள்ளதுடன் தொடருக்காக 16 பேர் கொண்ட இலங்கை குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் மிலான் ஜயதிலக்க இலங்கை அணிக்காக விளையாட வாய்ப்பிருப்பதாக இலங்கை அணித்தலைவர்
சரித் அசலங்க தெரிவித்தார்.







