‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில் பயன்பாட்டுக்கு

87
0
Spread the love

 

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை தற்போது இலங்கையில் கிடைக்கும் என தொழிலதிபர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக தளமான “X” இல் மஸ்க் இதனை பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை தொலைத்தொடர்பு
ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுத்தது.

இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்பதால், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here