செம்மணி மனித புதைக்குழி – 10 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள்

91
0
Spread the love

 

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைக்குழியின் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகள் 10 ஆவது நாளாகவும் இன்றைய தினம் (05.07) முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் புதிதாக மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப்
பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

குறித்த புதைக்குழியிருந்து, இன்றுவரையில் 45 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
அவற்றில் 42 என்புகூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், சித்துப்பாத்தி மனித புதைக்குழி வளாகத்தில் செய்மதி தொழில்நுட்பம் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட
பகுதியில் மண்டை ஓடுயோடு ஒன்றும் இன்று (05.07) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அகழ்வு பகுதியிலிருந்து, ஆயுதத்துடன் தொடர்புடையதெனச் சந்தேகிக்கப்படும் பொருளொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும்
சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் உடலில் ஆணிகள் அடிக்கப்பட்டதையொத்த அடையாளங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here