Big Beautiful பிரேரணையில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

58
0
Spread the love

 

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த பிரேரணையில் டொனால்ட் ட்ரம்ப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரித்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புக்காக செலவீனங்களுக்காக 150 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்த பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பபட்ட வரி குறைப்புகளின் நீட்டிப்பும் இந்த
பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தில் சில
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்திற்காக 100 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 218 வாக்குகளும் அதற்கு எதிராக 214 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here