கொஸ்கம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி உட்பட மூவர் காயம்

59
0
Spread the love

 

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (06.07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான தாயும் அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here