ரஷ்யா முதன்முறையாக ஆப்கானிஸ்தானின் தலீபான் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது அந்த நாட்டுடன் தூதரக அளவில் உறவை ஏற்படுத்தி கொண்டதுடன் மாஸ்கோவில் தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதகரகத்தை நிறுவவும் அனுமதித்துள்ளது.
தலிபான் அரசை அங்கீகரிப்பதன் மூலம் ரஷ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021 ஆண்டு ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 04 ஆண்டுகளாகிறது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு அண்டை நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை.







