மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவான கேரள கஞ்சா

79
0
Spread the love

 

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் நேற்று நள்ளிரவு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது
போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில்
போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here