மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி வாவியில் மூழ்கி, மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 10 வயதான, மூன்று சிறார்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் விசாரணைகளின் பின்னர், உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு
கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீன் பதனிடும் வாடிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது, மூன்று சிறுவர்களும் வாவிக்குள் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.







